Expired Food On Akasa Air: காலாவதியான உணவை வழங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்.. கொந்தளித்த பயணிகள்..!
ஆகாசா விமான பயணி ஒருவர், காலாவதியான உணவுப் பொட்டலங்களைப் பற்றி சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.
செப்டம்பர் 09, புதுடெல்லி (New Delhi): கோரக்பூர்-பெங்களூரு (Gorakhpur To Bangalore) விமானத்தில் பயணிகளுக்கு காலாவதியான உணவுப் பொட்டலங்களை ஆகாசா விமான நிறுவனம் (Akasa Air) வழங்கியதாக ஆகாசா ஏர் பயணி ஒருவர் புகார் அளித்துள்ளார். நேற்று முன்தினம் (செப்டம்பர் 07) பயணி ஒருவர் சமூக ஊடகங்களில் அளித்த புகாரை அடுத்து, ஒரு சில பயணிகளுக்கு தரமான தர நிர்ணயத்தை பூர்த்தி செய்யாத வகையில் கெட்டுப்போன (Expired Food Packets) சிற்றுண்டி வழங்கப்பட்டது என்று ஏர்லைன்ஸ் (Airlines) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Ballon Stuck in Throat: தொண்டையில் பலூன் சிக்கி 13 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
கோரக்பூரிலிருந்து பெங்களூருக்கு QP 1883 என்ற விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், கெட்டுப்போன உணவுகள் வழங்கியது தொடர்பாக எழுப்பிய புகாரை பரிசீலனை செய்து அதனை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறோம் என்று ஆகாசா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.