Bengaluru Woman Murder: 30 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; குற்றவாளியும் தற்கொலை.. காரணம் என்ன?!

பெங்களூரு இளம் பெண் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருத்தப்பட்ட முக்திராஜன் பிரதாப் ரே, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

Bengaluru Woman Murder (Photo Credit: @nedricknews X)

செப்டம்பர் 26, பெங்களூரு (Bengaluru News): நேபாளத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவருக்கு வயது 26. இந்தப் பெண்ணுக்கு கர்நாடக மாநிலம் நலமங்களவை சேர்ந்தவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் பெண் பெங்களூருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.

பெங்களூரு பயாலிகாவல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த பெண் வீட்டில் முன்தின இரவு (21ம் தேதி) கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் இருந்த வீட்டினர், அந்தக் குறிப்பிட்ட வீட்டில் இருந்தவரின் தாய்க்கு போன் செய்து, உங்கள் மகள் வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வருகிறது, ஏதோ தவறாக தோன்றுகிறது என கூறியுள்ளனர். இதனால் மகாலட்சுமியின் தாய் தனது மற்றொரு மகளுடன் அவரின் மூத்த மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. மகலாட்சுமிக்கு போன் செய்தால் அதுவும் சுவிட்ச் ஆப் என்றே வந்துள்ளது. Dangerous Riding On Running Bike: ஓடும் பைக்கில் கெத்து காட்டிய இளைஞர்.. காவல்துறையினர் நடவடிக்கை..!

இளம் பெண் கொலை: இதனால், அவர்கள் மாற்று சாவியைக் கொண்டு வீட்டின் கதவை திறந்துள்ளனர். வீட்டில் ரத்தம் சிந்தி, சிறு சிறு புழுக்கள் தரை முழுவதுமாக மொய்த்துக்கொண்டிருந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமியின் தாய், அந்துப்புழுக்கள் எல்லாம் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்துவந்துள்ளதை கண்டுள்ளார். மகாலட்சுமியின் தாய் அந்த பிரிட்ஜை திறந்தபோது, அதில் துண்டுதுண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் இருந்துள்ளது. அதனைக் கண்டதும் அவர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை: இந்த தகவலின் பெயரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். காவல்துறையினர் சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை துவங்கினர். அவரது உடல் 30 துண்டுகளாக வெட்டி கூறுபோடப்பட்டு, முதலில் அந்த பிரிட்ஜின், மேல் பகுதியில் அந்த பெண்ணின் இரு கால்களும், மற்ற பாகங்கள் பிரிட்ஜின் மற்ற இடங்களிலும் வைத்துள்ள கொலையாளி, பெண்ணின் தலையை பிரிட்ஜின் அடிப்பகுதியில் வைத்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் உள்ள கண்காணித்து கேமராக்களை ஆய்வு செய்தனர். கொலையாளியை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மகாலட்சுமியை ஒரு அடையாளம் தெரியாத நபர் சில சமயங்களில் வீட்டில் விடுவதும், வீட்டில் இருந்து அழைத்தும் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மகாலட்சுமியின் தாய் மீனா மற்றும் அவரது கணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும், அவருடன் வேலைப் பார்த்த மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், மகாலட்சுமியை தினமும் அழைத்து சென்று வந்தது தெரியவந்தது. அந்த இளைஞரை பற்றி தனிப்படை காவல்துறையினர் விசாரணை தொடங்கினர். அப்போது அவரது செல்போன் நம்பர் ஸ்வீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த அந்த நபர் யார் என காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொலை வழக்கில் சந்தேகப்படும் நபர் முக்தி ரஞ்சன் ராய் என்று கண்டறிந்தனர். அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என அறிந்த காவல் துறையினர், அவரை பிடிக்க ஒடிசா விரைந்தனர். Stock Market: தொடரும் காளை ஆதிக்கம்.. உச்சத்தைத் தொட்ட சென்செக்ஸ்..!

குற்றவாளி தற்கொலை: ஆனால் அதற்குள் அந்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், காவல் துறையினர் சம்பவ இடத்தில் இருந்த ஒரு பை, நோட்டு புத்தகம், ஸ்கூட்டி ஆகியவற்றை கைப்பற்றினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கிடைத்த கடித்தத்தில், "பெங்களூருவை சேர்ந்த மகாலட்சுமியை கொலை செய்தது நான் தான். பின்னர் அவரை உடலை துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வந்தேன். மகாலட்சுமியின் அரக்க குணம் மற்றும் கடுமையாக சண்டையிடும் குணங்களால், தான் மிகுந்த சலிப்படைந்துவிட்டேன். திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில், மகாலட்சுமி என்னை தாக்கினார், என்னை கோபத்துடன் கத்தினார். இதனால் நான் அவரைத் தாக்கிக் கொன்றேன்" எனக் குறிப்பிட்டிருந்தது. தற்போது காவல்துறையினர், அந்த தற்கொலை கடிதம் அவர் எழுதியதுதானா என்று கையெழுத்தினை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.