செப்டம்பர் 26, சென்னை (Technology News): பங்குச்சந்தையில் இந்த வாரம் பாசிட்டிவ்வான வாரமாக இருந்து வருகிறது. தொடர்ந்து இந்த வாரத்தில் பங்குச்சந்தை உயர்த்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டு சந்தை அளவுகோலான சென்செக்ஸ் (Sensex), புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211 புள்ளிகள் அதிகரித்து 26,216 ஆகவும் இருந்தது. Mumbai Rains: கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் மும்பை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!
சென்செக்ஸ்ஸின் 45 ஆண்டு கால வரலாற்றில், 850 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பங்குச் சந்தை முதலீட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவு முதலீடு செய்துள்ளனர். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்படும் வர்த்தக செயல்பாடுகளின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது.