IPL Auction 2025 Live

Delhi Heatwave: டெல்லியை புரட்டி அடிக்கும் வெப்ப அலை.. தீயணைப்புத் துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்..!

டெல்லியில் ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.

Heat Temperature (Photo Credit: Pixabay)

மே 30, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் வட இந்திய மற்றும் மத்திய இந்திய பகுதி மக்கள் தீவிர வெப்ப அலையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இந்த வாரம், 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை நாட்டின் 37க்கும் மேற்பட்ட நகரங்களில் பதிவாகியுள்ளது. நேற்று, வடமேற்கு டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் உள்ள வானிலை நிலையத்தில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. Medical Waste Disposal: காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்.. குமுறும் விருதுநகர் மக்கள்..!

இந்த வெப்பத்தின் தாக்கத்தால் பல்வேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் டெல்லியில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்ததாகவும் தீபாவளி பண்டிகையை தவிர, இதுவரை ஒரு நாளில் வந்த அதிகபட்ச அழைப்புகள் இதுதான் எனவும் தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் கார்க் (Delhi Fire Department Director, Atul Garg) தெரிவித்துள்ளார்.