Groom Attack In Wedding Reception: திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகன் மீது வாலிபர் சரமாரி தாக்குதல்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
ராஜஸ்தானில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மீது மணமகளின் முன்னாள் காதலன் சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 20, ராஜஸ்தான் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சித்தோர்கர் மாவட்டம், பில்வாராவில் திருமண வரவேற்பு (Wedding Reception) நிகழ்விற்கு வந்த வாலிபர் ஒருவர் மணமக்களுக்கு பரிசு வழங்க வந்துள்ளார். அப்போது, பரிசுகளை வழங்கிவிட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர், மணமகனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, திடீரென கத்தியால் அவரை சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதனால், பதற்றமடைந்த அவர்கள் அந்த வாலிபரை தடுக்க முயன்றபோதும், அவர் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். Man Dead Body In Train: எக்ஸ்பிரஸ் ரயிலில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு; ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை..!
இதனையடுத்து, மணமகளின் சகோதரர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மணமகளின் முன்னாள் காதலன் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. மணப்பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சங்கர் லால் பார்தி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர், நாளடைவில் காதலாக மாறியது. பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனையடுத்து, இவருக்கு திருமணம் நடைபெறுவதை அறிந்த இவர் அங்கு வந்து மணமகனை தாக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர், தாக்குதல் நடத்திய முன்னாள் காதலன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.