மே 20, சென்னை (Chennai News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கடந்த 15-ஆம் தேதி அன்று கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் (Express Train) வந்துள்ளது. பயணிகளை இறக்கிவிட்டு, அத்திப்பட்டியில் உள்ள ரயில்வே பணிமனைக்கு சென்றுள்ளது. பின்னர், அங்கு 3 நாட்களாகவே நின்றுள்ளது. Husband Killed Wife: மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்ட கணவர்..!
இதனையடுத்து, பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் இரவு பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஊழியர்கள் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக சென்டிரல் ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.