Helmets Mandatory For Children: 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மட், சீட் பெல்ட் கட்டாயம் - கேரளா அரசு..!
கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் மற்றும் கார்களில் பின் இருக்கையில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 09, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் (Helmet) கட்டாயமாகும். மேலும், குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கேற்ப கார்களில் பின் இருக்கையில் சீட் பெல்ட் (Seat Belt) அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில், காரின் முன் இருக்கையில் தாயின் மடியில் அமர்ந்திருந்த 2 வயது குழந்தை ஏர்பேக் அமுக்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கேரள மோட்டார் வாகனத்துறை (Kerala Motor Vehicles Department) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. Army Soldiers Kidnapped: காஷ்மீரில் 2 ராணுவ வீரர்கள் கடத்தல்.. தேடும் பணி தீவிரம்.., நடந்தது என்ன..?
இதுதொடர்பாக கேரள போக்குவரத்துத் துறை ஆணையாளர் எச். நாகராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கார்களில் பின் இருக்கையில் குழந்தைகளுக்கு அவர்களது வயதுக்கு ஏற்ப தனி இருக்கையும், சீட் பெல்ட்டும் கட்டாயமாகும். மேலும், 4 முதல் 14 வயது வரை உள்ள 135 செ.மீக்கு குறைவான உயரமுள்ள குழந்தைகளுக்கு கார்களில் பின் இருக்கையில் குஷன் உள்ள இருக்கையும், சீட் பெல்ட்டும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
இருசக்கர வாகனத்தில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாகும். கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்லும்போது, குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு வாகன ஓட்டுநர் தான் முழு பொறுப்பாகும். இதை மீறுபவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.