Supreme Court YouTube Channel Hacked: உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக்.. கிரிப்டோ விளம்பரம் ஒளிபரப்பு..!
உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் (YouTube Channel Hacked) செய்யப்பட்டுள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் 2.17 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இந்த யூடியூப் பக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய வழக்கின் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். Best Scooty in India: டிவிஎஸ் முதல் ஹூரோ வரை.. எது சிறந்தது? ஸ்கூட்டர் வாங்க திட்டமா?... அசத்தல் டிப்ஸ் இதோ..!
இத்தகைய சூழலில் தான் உச்சநீதிமன்றத்தின் யூடியூப் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்து, ‘ரிப்பிள்’ என்ற பெயர் மாற்றம் செய்துள்ளனர். அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனமான ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய டிஜிட்டல் நாணயமான எக்ஸ்ஆர்பியை அங்கீகரிக்கும் வீடியோக்களை சேனலில் வெளியிட்டு வருகின்றனர். அதே சமயம் உச்சநீதிமன்ற யூடியூப் பக்கத்தில் இருந்த முக்கிய காணொளிகள் நீக்கியுள்ளனர். இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.