EAM S Jaishankar To Visit Pakistan: பாகிஸ்தான் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.. காரணம் என்ன?!

எஸ்சிஓ கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாகிஸ்தான் செல்கிறார்.

EAM Jaishankar (Photo Credit: @ANI X)

அக்டோபர் 04, புதுடெல்லி (New Delhi): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு (Shanghai Cooperation Organisation) வருகின்ற அக்டோபர் 15,16 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இந்த எஸ்சிஓ (SCO) அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. ஆண்டுக்கு ஒருமுறை எஸ்சிஓ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தாண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கிடையே நிதி, பொருளாதார, சமூக கலாச்சார மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் குறித்த ஆலோசனை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க உறுப்பு நாடுகளுக்கு மட்டுமின்றி, கூடுதலாக, ஈரான், பெலாரஸ் மற்றும் மங்கோலியா ஆகியவை பார்வையாளர் நாடுகளாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சிஓ பாரம்பரியத்தின்படி, துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கும் விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Classical Language Status: இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து.. என்னென்ன மொழிகள் தெரியுமா?!

இந்நிலையில் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் (India's External affairs Minister S Jaishankar) பாகிஸ்தான் செல்வார் என என்று MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். 2015 டிசம்பருக்குப் பிறகு எந்த இந்திய வெளியுறவு அமைச்சரும் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 2015 இல் ஆப்கானிஸ்தான் தொடர்பான பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்லாமாபாத்துக்குச் சென்றார்.

பாகிஸ்தான் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்: