UPI Now In Sri Lanka and Mauritius: இப்போது இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ.. இந்திய சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

இந்திய சுற்றுலாப் பயணிகள் இனி இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்த முடியும்.

UPI Payment (Photo Credit: PIxabay)

பிப்ரவரி 13, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர். BJP Subramanian Swamy Criticize PM Modi: பிரதமர் மோடியின் சமூக வலைதள பதிவு.. சாடிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.. நடந்தது என்ன?

இந்நிலையில் இந்திய சுற்றுலா பயணிகள் இனி இலங்கை மற்றும் மொரிஷியசில் யுபிஐ (UPI)மூலம் ரூபாயில் பணம் செலுத்தக்கூடிய வசதியினை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை இலங்கை அதிபர் ரணில், மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜகுநாத் முன்னிலையில் காணொளி வாயிலாக இந்திய பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் கீழ், இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை மற்றும் மொரிஷியசில் (Sri Lanka and Mauritius) யுபிஐ மூலம் ரூபாய் செலுத்த முடியும். அது மட்டும் இன்றி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியும். இதற்கு முன் பிரான்ஸ், சிங்கப்பூர், பூடான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய நாடுகளுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.