IndiGo Fined ₹1.2 Crore: ஓடுபாதையில் சாப்பிட்ட பயணிகள்.. இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.2 கோடி அபராதம்..!

மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ பயணிகள் விமானத்தின் அருகே அமர்ந்து உணவை உண்ணும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, இண்டிகோ நிறுவனத்திற்கு 1.20 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

IndiGo Passengers Have Dinner On Apron (Photo Credit: @baldwhiner X)

ஜனவரி 18, புதுடெல்லி (New Delhi): வட இந்திய மாநிலங்களில் கடுபனிமூட்டம் நிலவுகிறது. இதனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. எனவே விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதனைத் தொடர்ந்து, நேற்று டெல்லியில் (Delhi) இருந்து கோவாவுக்கு (Goa) புறப்பட இருந்த இண்டிகோ விமானமும் தாமதம் (IndiGo Flight Delay) ஆனது. PM Modi Releases Postal Stamp On Ayodhya Temple: ராமர் கோவில் தபால் தலை.. பிரதமர் மோடி வெளியீடு..!

விமானியைத் தாக்கிய பயணி: கிட்டத்தட்ட 12 மணி நேரம் பயணிகள் காத்திருந்தனர். அப்போது விமான இயக்கம் குறித்து இண்டிகோ விமானத்தின் விமானி தாமதம் குறித்து விளக்கியபோது, பயணி ஒருவர், திடீரென நடந்துச் சென்று விமானியை தாக்கியிருப்பார். இந்த வீடியோவானது, சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக வைரலானது. தொடர்ந்து அந்த பயணி மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டிருந்தார்.

விமான ஓடுபாதையில் உணவு சாப்பிட்ட பயணிகள்: இந்நிலையில் தற்போது மற்றொரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விமானம் தாமதமானதால் பயணிகள் மும்பை (Mumbai) விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பசியில் பயணிகள், விமான ஓடுபாதையிலேயே அமர்ந்து உணவு சாப்பிட ஆரம்பித்துள்ளனர். இந்த வீடியோ தான், இணையம் முழுதும் வைரலானது. Google More Layoffs: கூகுள் பணி நீக்கம் தொடக்கம்... சுந்தர் பிச்சையின் அதிரடி..!

இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம்: இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, விளக்கம் அளிக்கும் படி, இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூபாய் 1.20 கோடி ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது. இது போக டிஜிசிஏ சிவில் ஏவியேஷன் டைரக்டரேட் ஜெனரல், மும்பையில் உள்ள சிஎஸ்எம்ஐ விமான நிலையத்திற்கு எம்ஐஏஎல் ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து உள்ளது. அதுமட்டுமின்றி அபராதத்தை 30 நாள்களுக்குள் செலுத்த வேண்டுமென இண்டிகோ நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement