PM Modi Releases Postal Stamp (Photo Credit: @ANI X)

ஜனவரி 18, புதுடெல்லி (New Delhi): வரும் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ராமர் கோயில் நினைவு தபால் தலைகளையும் உலகம் முழுவதும் ராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகளின் புத்தகங்களையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். Google More Layoffs: கூகுள் பணி நீக்கம் தொடக்கம்... சுந்தர் பிச்சையின் அதிரடி..!

இந்த புத்தகமானது 48 பக்கங்களைக் கொண்டது. அதில் ஐ.நா., சபை, அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தபால் தலைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ராமர் கோயில், கணேஷ், ஹனுமான், ஜடாயு, கேவதராஜ மற்றும் மா ஷப்ரி உள்ளிட்ட 6 தபால் தலைகள் உள்ளன. இந்த தபால் தலைகளின் வடிவமைப்பில் ராம் மந்திர், சௌபை 'மங்கள் பவன் அமங்கல் ஹரி', சூரியன், சரயு நதி மற்றும் கோவிலிலும் அதைச் சுற்றியுள்ள சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.