Three Pakistan Players Fined (Photo Credit: @tajal_noor X)

பிப்ரவரி 15, கராச்சி (Sports News): பாகிஸ்தானில் முத்தரப்பு ஒருநாள் (Pakistan ODI Tri Series 2025) கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 08ஆம் தேதி தொடங்கி, நேற்று (பிப்ரவரி 14) இறுதிப்போட்டியுடன் நடைபெற்று முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி, பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி 353 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக எட்டி சாதனை படைத்தது. Pak Vs NZ ODI Tri-Series Final: சொந்த மண்ணில் மண்ணைக்கவ்விய பாகிஸ்தான்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி.!

3 வீரர்களுக்கு அபராதம்:

இப்போட்டியின் 28வது ஓவரில், தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன் மேத்யூ பிரீட்ஸ்கே (Matthew Breetzke) ரன் எடுக்க ஓடியபோது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி (Shaheen Shah Afridi) வாக்குவாதம் செய்தார். இதில், நடுவர் தலையிட்டு சமாதானம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 29வது ஓவரில் ரன் அவுட் ஆனார். அப்போது, அவரை வழிமறித்து சவுத் ஷகீல் (Saud Shakeel), கம்ரன் குலாம் (Kamran Ghulam) ஆகியோர் ஆக்ரோஷமாக கொண்டாடினர். இதுதொடர்பாக, விசாரணை நடத்திய ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதாக ஷாகீன் ஷா அப்ரீடிக்கு 25 சதவீத அபராதத்தையும் சவுத் ஷகீல், கம்ரன் குலாம் ஆகியோருக்கு 10 சதவீத அபராதத்தையும் விதித்துள்ளது. மேலும், மூன்று வீரர்களுக்கும் ஒழுங்காற்று பதிவுகளில் தலா ஒரு புள்ளியை இழந்தனர்.

வீடியோ இதோ: