
பிப்ரவரி 13, ஐதராபாத் (Andhra Pradesh News): அமெரிக்காவில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற லட்சுமி நாகல்லா என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி அன்று தனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அன்னாவரம் அருகே பேருந்து அவர்களின் வாகனத்தில் மோதி விபத்து (Road Accident) ஏற்பட்டது. இந்த விபத்தில், லட்சுமி நாகல்லா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் இருந்தபடி வேலை.. ஓடும் காரில் லேப்டாப்புடன் பெண் செய்த சம்பவம்.. வைரலாகும் வீடியோ.!
இழப்பீடு கோரி மனு:
அமெரிக்காவில் மாதத்திற்கு $ 11,600 சம்பாதித்த லட்சுமி உயிரிழந்ததால், அவரது கணவர், தனது மனைவியின் அதிக வருவாய் ஈட்டும் திறனைக் காரணம் காட்டி, செகந்திராபாத் மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் ரூ. 9 கோடி இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். தீர்ப்பாயம் ரூ. 8.05 கோடி இழப்பீடு வழங்கியது. இருப்பினும், ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (APSRTC) இந்த உத்தரவை தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தது. இதனால் இழப்பீட்டுத் தொகையை ரூ. 5.75 கோடியாகக் குறைத்தது.
9 கோடி இழப்பீடு:
அதனைத் தொடர்ந்து கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் (பிப்ரவரி 11) இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதில், ரூ. 9,64,52,220 செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.