Import Duty On Mobile Phone Slashed: மத்திய பட்ஜெட் 2024.. மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரி குறைப்பு..!
மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15% முதல் 10% வரை குறைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
ஜனவரி 31, புதுடெல்லி (New Delhi): 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வைக்க உள்கட்டமைப்புத் துறை உட்பட முக்கியமான துறைகளில் அதிகப்படியான மூலதனத்தைச் செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. U19 World Cup: தொடர்ச்சியாக 2வது சதம் அடித்த முஷீர் கான்... தவானின் சாதனையை வீழ்த்துவரா?.!
இறக்குமதி வரி குறைப்பு: இந்நிலையில் பட்ஜெட்டுக்கு சற்று முன், மொபைல் போன் உதிரி பாகங்கள் மீதான இறக்குமதி வரியை 15% முதல் 10% வரை குறைப்பது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பேட்டரி இணைப்புகள், முதன்மை லென்ஸ்கள், பின்புற கவர்கள், சிம் சாக்கெட் ஆகியவைகள் அடங்கும். இந்த நடவடிக்கையானது இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்தியாவில் உள்ள உயர்மட்ட மொபைல் போன்களின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன், மொபைல் கேமரா ஃபோன்களின் குறிப்பிட்ட பாகங்கள் மீதான 2.5 சதவீத சுங்க வரியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கினார். தொடர்ந்து, இந்திய ஸ்மார்ட்போன்களின் ஏற்றுமதி 2022ல் $7.2 பில்லியனில் இருந்து 2023ல் $13.9 பில்லியனாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.