Bharat 6G Vision (Photo Credit: @utsavtechie / @Indianinfoguide X)

October 26, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் 5ஜி நெட்ஒர்க் சேவை மக்களால் பரவலாக பயன்படுத்த தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் 6ஜி தொழில்நுட்பமும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான பணிகளை இந்தியா தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக, 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவை மேம்பட்ட தொலைத்தொடர்பு மையமாக மாற்றும் முயற்சிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளன. அதன்படி, 6ஜி தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி நடந்து வருகிறது. ChatGPT Atlas: கூகுளுக்கே சவால்.. க்ரோம்க்கு போட்டியாக வந்தது சாட்ஜிபிடி அட்லாஸ்.. வசதிகள் ஏராளம்.! 

இந்தியாவில் விரைவில் 6ஜி இணையசேவை (India 6G Network Data):

இந்திய அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் எதிர்காலத்துக்கான திட்டத்தின்படி, 6ஜி தொழில்நுட்பம் மலிவான விலை, நிலைத்த தன்மை, உலகளாவிய அணுகல் உட்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு ஆராய்ச்சி, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அதிவேக இணையசேவை சென்றடைதல் உட்பட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு 6ஜி நெட்ஒர்க் சேவைக்கான விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 6ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், அதன் வேகம் 5ஜி சேவையை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும். மேம்பட்ட ரோபோடிக்ஸ், ஸ்மார்ட் நகரங்களுக்கு 6ஜி சேவை பிரதானமாக பயன்படும். முதற்கட்டமாக 6ஜி தொழில்னட்பம் அரசு, தொழில், கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு பின் படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.

6ஜி தொழில்நுட்பம் தொடர்பான அரசின் அறிவிப்பு: