Musheer Khan (Photo Credit: @cricbuzz X)

ஜனவரி 31, தென்னாப்பிரிக்கா (South Africa): தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (U19 World Cup) தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்பிராஸ் கானின் தம்பி முஷீர் கான் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முஷீர் கான் ஆடிய விதம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. UNESCO World Heritage Nomination: அப்படிப்போடு.. உலகளவில் அங்கீகாரம் பெறப்போகும் செஞ்சிக்கோட்டை; தமிழ்நாட்டுக்கே பெருமை..!

2வது சதம் அடித்த முஷீர் கான்: சூப்பர் சிக்ஸர் சுற்றின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணியில் முஷீர் கான் (Musheer Khan), 3 வது வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடினார். அவர் எதிர்கொண்ட 126 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும், 3 சிக்ஸரும் அடங்கும். மேலும் முஷீர் கான், சச்சின் மற்றும் தோனி போல் ஷாட் ஆடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி இவரின் சதம் காரணமாக இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 81 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.

தவானின் சாதனையை வீழ்த்துவரா?: இதன் வாயிலாக அண்டர்-19 உலககோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 1க்கும் ஏற்பட்ட சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ஷிகர் தவான் (Dhawan) சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2004 அண்டர்-19 உலகக் கோப்பையில் ஷிகர் தவான் 3 சதங்கள் அடித்துள்ளார்.