SC Chief Justice Oath: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக பதவியேற்பு.. யார் அந்த சஞ்சீவ் கண்ணா?!
நீதிபதி சஞ்சீவ் கண்ணா இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
நவம்பர் 11, புதுடெல்லி (New Delhi): உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (Justice ) பதவியேற்றார். இவரது பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை இருக்கிறது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் பதவியேற்ற நிலையில் நேற்று (நவம்பர் 10-ம் தேதி) ஓய்வு பெற்றார். Woman Murdered For Silver Anklets: கொடூரமான முறையில் நடந்த கொலை.. கொலுசுக்காக வெட்டப்படும் கால்கள்.. பின்னணி என்ன?!
சஞ்சீவ் கண்ணா: சஞ்சீவ் கண்ணா டெல்லியில் 1960 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை தேவ்ராஜ் கண்ணா டெல்லி உயர் நீதிமன்றத்தில் 1985 ஆம் ஆண்டு நீதிபதியாக இருந்தவர். சஞ்சீவ் கண்ணா டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். 2016-ம்ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2019-ம்ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இவர் அரசியல் கட்சிகள் தேர்தல்பத்திரம் மூலம் நிதி பெற்றது தொடர்பாக வழக்கு; சட்டப்பிரிவு 370 உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது.