Murder Blood (Photo Credit: Pixabay)

நவம்பர் 11, செஹோர் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் 75 வயது மூதாட்டியின் வெள்ளிக் கொலுசுகளைத் திருடுவதற்காக கொள்ளையர்கள் இரு கால்களையும் வெட்டி வாய்க்காலில் வீசியுள்ளனர். இதில் இரவு முழுவதும் ரத்தம் கசிந்து மூதாட்டி இறந்துள்ளார். நீண்ட நேரமாகியும் மூதாட்டி வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மறுநாள் காலையில் மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார். உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். NEET Student Raped: நீட் பயிற்சிக்கு வந்த மாணவி ஆசிரியர்களால் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

மே 2014 இல் இதே மாவட்டத்தில் 35 வயது கர்ப்பிணிப் பெண்ணின் வெள்ளிக் கொலுசுகளைக் கொள்ளையடிக்க அவரது கால்களை வெட்டி கொலை செய்தனர். ம.பி.யின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இதுபோன்ற வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிந்த்வாரா மாவட்டத்தின் சங்ககேடா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் 75 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் வெள்ளிக் கொலுசுகளைக் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்ததால், கோடரியால் அவரது கால்களை வெட்டியதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு ராஜ்கரில், 40 வயதுடைய பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெள்ளிக் கொலுசுக்காக படுகொலை செய்யப்பட்டார்.