Earthquake In Mizoram: மிசோரமில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு..!

Earthquake In Mizoram (Photo Credit: @NCS_Earthquake X)

ஜனவரி 05, மிசோரம் (Mizoram): மிசோரம் மாநிலத்தில் இன்று காலை 7 மணி அளவில், லங்க்லே பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 (Richter scale)ஆக பதிவானது. இதனால் எந்த ஒரு உயிர் சேதமும் பொருட் சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். மேலும் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று நேற்று இரவு ஜம்மு காஷ்மீரிலும் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணமும் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதே ஆகும். Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் பதவி என்ன ஆனது?.. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..!