ஜனவரி 05, சென்னை (Chennai): தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் இருக்கும் பொழுது பண மோசடி செய்தார். அந்த வழக்கு தொடர்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம், சோதனைகள் நடத்தியது. இந்த சோதனைகளைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை கைது செய்தது. தொடர்ந்து செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்தனர். அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. IND vs SA 2nd Test 2023-24 Best Moments: கேப் டவுனில் முதல் வெற்றி.. வரலாற்றை மாற்றிய இந்தியா..!
உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு: அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது குறித்து முதலமைச்சரே முடிவெடுக்கலாம் என்றது. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. Bus Conductor Attacked: மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக தாக்கிய அரசு பேருந்து ஊழியர்... பணியிடை நீக்கம்..!
இன்று அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரத்தில் ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே, முதலமைச்சரே முடிவெடுக்கலாம் என்றும் கூறி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதற்கு தடையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.