UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!

உத்தரபிரதேசத்தில் அரசின் திருமண உதவித்தொகையைப் பெறுவதற்காக மணமகனே இல்லாமல் தனக்குத்தானே பெண்கள் திருமணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mass Marriage Fraud (Photo Credit: @AvinashKS14 X)

பிப்ரவரி 01, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): உத்திரபிரதேச மாநிலம் பல்லியாவில், 'முக்யமந்திரி வெகுஜன திருமண திட்டம்' மூலம் ஒரே நாளில் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்ணுக்கு திருமணத்திற்காக ரூபாய் 51 ஆயிரம் மாநில அரசால் வழங்கப்படுகிறது. அரசு கொடுக்கும் இந்த காசுக்காக பலர் இத்திட்டத்தில் போலியாக திருமணம் செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 500 மணப்பெண்கள், மணமகன்கள் இல்லாமல் அவர்களின் கழுத்திற்கு அவர்களே மாலை அணிவித்து திருமணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. Gold Silver Price Today: ரூ.47 ஆயிரத்தை கடந்ததும் சவரன் தங்கத்தின் விலை; நகைப்பிரியர்களுக்கு ஷாக் செய்தி.!

அது மட்டும் இன்றி இத்திருமணத்திற்கு வந்த சில பெண்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் உள்ளது. ஒரு சிலரோ சகோதர சகோதரிகளுடனும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த வழக்கினை விசாரித்து வரும் காவல்துறையினர், உள்ளூர் ஏடிஓ உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிற்காக 20 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. உத்திரப்பிரதேசத்தில் காசுக்காக இவ்வாறு நாடக திருமணம் செய்து கொண்ட சம்பவமானது, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.