பிப்ரவரி 01, சென்னை (Chennai): தங்கத்தின் மீதான இறக்குமதி வரி, மாநில அளவில் விதிப்படும் வரிகள் உட்பட பல காரணங்களால் இந்தியாவில் அதிகமாக விதிக்கப்பட்டு வரும் தங்கத்தின் விலை, எப்போதும் உச்சத்தில் இருக்கும். ஆனால், அதனை வாங்கும் மக்களின் நுகர்வு என்பது குறையாத காரணத்தால், தங்கத்தின் விலை எப்போதுமே உச்சகட்ட அளவிலேயே இருந்து வருகிறது. சர்வதேச அளவில் நிலவும் அடுத்தடுத்த பல பிரச்சனைகள் தங்கத்தின் விலையை இந்தியாவில் 40 ஆயிரத்தை கடக்க காரணமாக அமைந்து, தற்போது 47,000-ஐ கடக்க உந்துகோலாக அமைந்துள்ளது.
தங்கத்தின் விலை நிலவரம்: இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் (Gold Price Today) விலை ரூபாய் 47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து, ரூபாய் 47,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 30 உயர்ந்து, ரூ.5,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தமட்டில் 20 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி விலை ரூபாய் 77.80-க்கும், கிலோ அளவில் ரூபாய் 200 குறைந்து ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Atlee Son Birthday Celebration: மனைவியுடன் குழந்தையின் முதல் பிறந்தநாளை சிறப்பித்த இயக்குனர் அட்லீ.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
நகை பிரியர்களுக்கு தொடரும் அதிர்ச்சி: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, அதனை விரும்புவோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் இவ்வாறான சூழல் தொடர்பு பட்சத்தில், ரூபாய் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக தங்கத்தின் விலை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் மக்களிடையே எப்போதும் அதிகம். பிறப்பில் தொடங்கி, இறப்பு வரை சீர், பரிசு, பதில் மொய் என தங்கம் பெரும் இடத்தை தக்கவைத்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 47 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 240 உயர்ந்து, ரூபாய் 47,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.#Chennai | #GoldSilverPrice | #Tamilnadu | #LatestLYTamil pic.twitter.com/F4DBLSNUzE
— Sriramrpckanna (@Sriramrpckanna1) February 1, 2024