Karnataka Rakshana Vedike Members Hold Protest: பெயர் பலகைகளில் கன்னடம் கட்டாயம்... பெங்களூரில் வெடித்த போராட்டம்..!
பெங்களூரில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களின் பெயர் பலகைகளில் கன்னட மொழி கட்டாயம் என்று ரக் ஷக் வேதி அமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 27, பெங்களூர் (Bengaluru): கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள பெங்களூரில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பலர் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் அங்கு கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குள்ள பெயர் பலகைகள் ஆங்கிலம், கன்னடம் மற்றும் பல மொழிகளில் கலந்து வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் கர்நாடக பாதுகாப்பு மன்ற கூட்டம் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடந்தது. அதில் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வகையான வணிக விற்பனை நிலையங்களின் பெயர் பலகைகளிலும் கன்னடம் மொழியை கட்டாயம் ஆக்க வேண்டும் என்று அனைவரும் குரல் எழுப்பினர். Modi Govt Advisory On Fraudulent Loan Apps: கடன் மோசடி தொடர்பான செயலிகள் விளம்பரங்களுக்கு ஆப்பு; மத்திய அரசு சமூக வலைத்தளங்களுக்கு அறிவுறுத்தல்.!
கன்னட பெயர் பலகைகள் கட்டாயம்: அதனைத் தொடர்ந்து, அக்கூட்டத்திற்கு பின்னர் மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் பெங்களூரில் இருக்கும் பெயர் பலகைகளில் 60% கன்னட மொழி பயன்படுத்த வேண்டும், இல்லை எனில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கர்நாடக ரக் ஷக் வேதி அமைப்பினர் (Rakshana Vedike Members) கர்நாடகா முழுவதும் கன்னட மொழி பலகை கட்டாயமாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி கன்னட மொழியின் கட்டாயம் குறித்து ஆங்காங்கே விழிப்புணர்வு அட்டைகளுடன் ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.