ஆகஸ்ட் 29, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) உள்ள சுட்டுகுண்டேபாளையாவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 31). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு கோப்பல்லை சேர்ந்த ஷில்பா (வயது 27) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியருக்கு 2 வயது மகன் உள்ளார். இவர்கள் இருவரும் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது, ரூ. 35 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. மணமகனுக்கு வரதட்சணையாக 150 கிராம் தங்க நகைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து பிரவீன், ஷில்பாவை மணந்து ஒரு வருடம் கழித்து தனது ஐடி வேலையை விட்டுவிட்டார். பின்னர், பெங்களூருவில் பானி பூரி கடையை தொடங்கியுள்ளார். 'தனது மனைவியால் உயிருக்கு ஆபத்து' - கணவர் பரபரப்பு புகார்..!
கர்ப்பிணி பெண் சடலமாக மீட்பு:
இந்நிலையில், பிரவீன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இரவு 9.15 மணியளவில், ஷில்பா பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள அவர்களது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதில், சந்தேகமடைந்த ஷில்பாவின் தாயார், பிரவீனும் அவரது தாயாரும் தனது மகள் ஷில்பாவை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்தனர். வரதட்சணை (Dowry) கேட்டு துன்புறுத்தியுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் இறக்கும் போது, ஒன்றரை மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணை:
உயிரிழந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில், கணவர் பிரவீனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது கொலையா? அல்லது தற்கொலையா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.