IT Minister Rajeev | Online Scam (Photo Credit: @PTI X / Pixabay)

டிசம்பர் 27, புதுடெல்லி (New Delhi): சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து, அது சார்ந்த மோசடிகளும் அதிகரித்து இருக்கின்றன. குறைந்த வட்டிக்கு கடன் (Loan Scam Apps), அதிக முதலீடு செய்தால் உடனடி பணம் இரட்டிப்பு என மக்களை நூதன முறையில் இணையவழியில் ஏமாற்றும் கும்பல்கள் தொடர்ந்து தங்களின் திருட்டு செயலை நிகழ்த்தி வருகிறது.

டிஜிட்டல் இந்தியாவின் சிக்கலும், வலுவாகும் கட்டமைப்பும்: இதனால் பணத்தை இழந்தவர்கள், கடன் செயலிகளின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்தவர்கள் என அடுத்தடுத்து அரசுக்கு நெருக்கடி ஏற்பட தொடங்கியது. அதேவேளையில் எதிர்கால டிஜிட்டல் இந்தியாவை வலுத்தன்மையுடன் கட்டமைக்க, இவ்வாறான இடர்பாடுகளை எதிர்கொண்டு, அது சார்ந்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை அறிவுறுத்தல்: சமீபகாலமாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் புகார்களை கருத்தில் கொண்டு, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சமூக ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தியாவின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பட செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறது. Congo Flood: காங்கோவில் தொடர் மழையினால் வெள்ளம், நிலச்சரிவு: 22 பேர் பரிதாப பலி.! 

Online Scam (Photo Credit: Pixabay)

லோன் செயலிகள் விளம்பரத்திற்கு கட்டுப்பாடு: இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மோசடி கடன் செயலிகள் விவகாரத்தில், சமூக வலைத்தளங்கள் விளம்பரங்களை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளார். கடன் செயலிகள் விளம்பரங்கள் குறித்த தகவலில் இருக்கும் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதனை ஒளிபரப்பு செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

விளம்பரங்களை தவிர்க்க அறிவுறுத்தல்: சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் தவறான தகவலை கொண்டு சேர்க்காமல், பொறுப்புணர்வுடன் சமூக வலைதள நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மக்களின் பணத்தை சுரண்டக்கூடிய கடன் மோசடி செயலிகளை விளம்பரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

நடப்பு ஆண்டில் மட்டும் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 65,893 புகார்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.