Hathras Stampade: இசைக்கச்சேரியில் மிகப்பெரிய துயரம்.. துள்ளத்துடிக்க 23 பேர் பலி? கூட்டநெரிசலில் சிக்கி 100 பேர் காயம்..! உ.பி-யில் சோகம்..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Hathras Stampede (Photo Credit: @humsamvet X)

ஜூலை 02, ஹத்ராஸ் (Uttar Pradesh News): உத்தரப் பிரதேச மாநிலத்தின் உள்ள சத்யராஜ் மாவட்டத்திலுள்ள ஹத்ராஸின் ரதிபன்பூரில் உள்ள, போர் பகுதியில் சாட்சசன் எனப்படும் சமய இசை கச்சேரி நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் போல் கூடியிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு ஆண், 19 பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 23 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர். Bajaj CNG Bike: உலகின் முதல் சிஎன்ஜி பைக்.. இந்தியாவிற்கு எப்போது வருகிறது தெரியுமா?.!

இதில் இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எட்டா மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.