PM Modi US Visit: ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு.. பங்கேற்க பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம்..!

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PM Narendra Modi (Photo Credit: @ANI X)

செப்டம்பர் 20, புதுடெல்லி (New Delhi): இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு (Quad Summit), அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் அமெரிக்காவின் டெலாவாரேயில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi), 21ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அக்டோபர் 23ம் தேதிவரை அமெரிக்காவில் இருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இது தொடா்பாக, வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி செய்தியாளா்களிடம் கூறியதாவது, "குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், ஐநா பொது சபையில் உரையாற்றுவதற்காகவும் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். குவாட் மாநாட்டின் பின்னணியில் அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோருடன் பிரதமர் மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துவார். One Nation One Election: மீண்டும் குரலை உயர்த்தும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" விவகாரம்.. முந்தைய வரலாறு என்ன?..!

மேலும் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு, இந்தியா-அமெரிக்கா போதை பொருள் கட்டமைப்பு ஆகியவை தொடர்பான 2 ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்திட உள்ளார். தொடர்ந்து உக்ரைன் முதல் காசா மோதல் வரையிலான பிரச்சனைகள் விவாதிக்கப்படும். இந்தப் பயணத்தின்போது அமெரிக்காவாழ் இந்தியர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.