PM Modi Tweet On Agni 5: தரையில் இருந்து தரை இலக்கைத் தாக்கும் அணு ஆயுத ஏவுகணை... அக்னி 5 குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட ட்வீட்..!
அக்னி 5 ஏவுகணை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தற்போது அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
மார்ச் 11, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) தனது எக்ஸ் தளத்தில்"உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலக்குகளை தன்னிச்சையாக குறி வைக்கக்கூடிய தரம் உயர்த்தப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ் அஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது" என பதிவிட்டுள்ளார்.
அக்னி ஏவுகணையானது ஐயாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை வெற்றிகரமாக நீண்ட தூரம் சென்று வெற்றிகரமாகத் தாக்கக்கூடிய ஏவுகணை ஆகும். அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட ஐம்பதாயிரம் கிலோ எடை கொண்ட இந்த ஏவுகணை 1500 கிலோ எடையுள்ள ஆயுதத்தைச் சுமந்து செல்லக்கூடியது. அதாவது இந்தியாவின் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் இதுவும் ஒன்று.
இதைக் குறைந்த கால அளவில் எளிதாக ஏவமுடியும் என்பது இந்த ஏவுகணையின் மற்றொரு சிறப்பம்சமாகும். அனைத்து வானிலைச் சூழலிலும் பாதுகாக்கப்படவும் ஏவப்படவும் இந்த கேனிஸ்டரைசேஷன் உதவுகிறது. இன்று இந்த தரம் உயர்த்தப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ் அஸ்திரா சோதனை நடத்தப்பட்டுள்ளது.