IPL Auction 2025 Live

Serial Killer Arrest: சித்தியின் கொடுமையால் சைக்கோவான இளைஞன்; 6 பெண்கள் கொடூர கொலை.. விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலம்..!

உத்தர பிரதேசத்தில் 6 பெண்களை கொடூரமாக கொலை செய்த சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Serial Killer Arrest (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 09, பரேலி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பரேலி (Bareilly) மாவட்டத்தில் பெண்களை தொடர் கொலை (Serial Killer) செய்த சைக்கோ கொலையாளி (Psycho) குல்தீப் இன்று (ஆகஸ்ட் 09) கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

அதில், குல்தீப் தனது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். தந்தை பாபுராம், அவரது தாயார் உயிருடன் இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து, அவரது சித்தி குல்தீப்பின் தாயை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும், இவர் வீட்டிற்கு வந்த பிறகு, அவனது தாயும் இரண்டு சகோதரிகளும் இறந்துவிட்டனர். இந்த சம்பவங்கள் குல்தீப்பின் மனதில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவன் ஒரு பைத்தியக்காரனைப் போல நடந்துகொண்டுள்ளார். 13-Year-Old Girl Performs Bharatnatyam For 3 Hours: வயநாடு நிலச்சரிவு.. தொடர்ந்து 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி நிதி திரட்டிய 13 வயது சிறுமி..!

இதனையடுத்து, கடந்த 2014-ஆம் ஆண்டு குல்தீப் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். குல்தீப்பின் தொல்லையால் மனமுடைந்த அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால், மிகவும் மனமுடைந்து காணப்பட்ட அவர், கஞ்சா போதையில் காடுகளில் வாழத்தொடங்கியுள்ளார். அப்போது, மனதளவில் பாதிக்கப்பட்ட அவர் 45 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களை குறிவைத்து, அந்த பெண்கள் தனியாக வரும் போது, அவர்களை பின்தொடர்ந்து தாக்கியுள்ளார். மேலும், அவர்களது புடவையினால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை (Murder) செய்துள்ளார். அவர்களைக் கொன்ற பிறகு அவர்களைப் பார்த்து சிரித்துள்ளார்.

இதுகுறித்து காரணம் கேட்டபோது, இதன்மூலம் ​​தன்னுடைய சித்தியைக் கொன்றதாக உணர்ந்ததாகவும், தனக்கு திருப்தியை அளித்ததாகவும் கூறியுள்ளார். இதே முறையில் 6 தொடர் கொலைகளை செய்ததாக குல்தீப் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினர் தெரிவிக்கையில், கடந்த 14 மாதங்களில் பரேலியின் ஷாஹி மற்றும் ஷிஷ்கர் காவல்நிலையப் பகுதிக்கு உட்பட்ட சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவில் 9 பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.