Vandhe Bharat Orange Color: வந்தே பாரத் ரயில்களில் காவி நிறம்: அரசியலா?அறிவியலா ?: விளக்கம் அளிக்கிறார் ரயில்வே அமைச்சர்.!
மேலும் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக சாதாரண் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கிறது.
அக்டோபர் 05, புதுடெல்லி (India News): வந்தே பாரத் ரயிலில் காவி நிறம் பூசப்பட்டதற்கு எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை என்று ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அவர், “மனிதர்களின் கண்களுக்கு தொலைதூரத்திலும் மிகவும் தெளிவாக புலப்படக் கூடியது இரண்டு நிறங்கள் தான். அது மஞ்சள் மற்றும் காவி நிறம். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் (European Countries) ஏறக்குறைய 80 சதவீதம் ரயில்கள் இந்த நிறத்தில் தான் இருக்கிறது. Sudarsan Pattnaik Congrats to Neeraj: நீரஜ் சோப்ரா, கிஷோருக்கு தனது பாணியில் நன்றி சொன்ன பிரபல மணல் சிற்பக்கலைஞர்: கொண்டாடும் இந்தியா.!
சில இடங்களில் சில்வர் நிறம் பயன்படுத்தப்பட்டாலும், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் தான் அடர்த்தியாகவும் எளிதில் பார்வைக்கு புலப்படுவதாகவும் இருக்கும். அதனால்தான் புதிய வந்தே பாரத் ரயில்களுக்கு இந்த நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. 100 சதவீதம் அறிவியல் காரணங்களுக்காகவே இந்த நிறம் பூசப்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை குழு பயன்படுத்தும் லைஃப் ஜாக்கெட்டுகளும் ஆரஞ்சு நிறத்தில்தான் இருக்கிறது.” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
நாடு முழுவதும் மொத்தம் 34 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சொகுசு ரயில்களாக ஏசி பெட்டிகளுடன் அமைந்திருக்கிறது. விரைவு ரயில்களுடன் ஒப்பிடுகையில் கட்டணம் கூடுதலாக இருப்பதாக பயணிகள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
அதனால் எளிய மக்களின் பயன்பாட்டிற்காக சென்னையில் இருக்கும் ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில், சாதாரண வந்தே பாரத் சாதாரண் வந்தே பாரத் (Sadharan Vandhe Bharat) ரயிலுக்கான தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.