RBI Stops Paytm Payments Bank: பேடிஎம் பயனாளர்களுக்கு அதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது பேடிஎம்..!

ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Paytm (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். அதிலும் பேடிஎம் செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். Bihar Cricketer Vaibhav Suryavanshi: சச்சின் மற்றும் யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு.. ரஞ்சி கோப்பையில் அறிமுகமான 12 வயது வீரர்..!

இந்நிலையில் ரிசர்வ் வங்கி விதித்த விதிகளை தொடர்ந்து மீறி வருவதாக கூறி, பேடிஎம் நிறுவனம் மீது அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பேடிஎம் வங்கியில் பணத்தை புதிதாக டெபாசிட் செய்யவும் பண பரிமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு பிறகு, இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பேடிஎம் நிறுவனம் யு.பி.ஐ (UPI ) பரிவர்த்தனைகளை தொடர்வதில் எந்த தடையும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.