Orange Alert For Tamil Nadu & Puducherry: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rain | Yellow & Orange Alert (Photo Credit: Pixabay)

மே 23, புதுடெல்லி (New Delhi): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும்.

பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25ம் தேதி மாலை நிலவும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை (115.5-204.5 மிமீ) பெய்ய வாய்ப்புள்ளது. எனவே ஆரஞ்சு அலெர்ட் (Orange Alert) விடுப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Madurai As Thoonga Nagaram: மதுரைக்கு தூங்காநகரம் என்ற பெயர் வர காரணம் என்ன? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!

மேலும் கேரளாவில் மிக கனமழை பெய்யும் என 5 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் நீடிக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது.