மே 23, மதுரை (Madurai): மதுரைக்கு தூங்காநகரம் என்ற பெயர் வந்ததற்கு ஆங்கிலேயர் தான் காரணம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ஹார்விமில் தான் அதற்கு காரணம்.

அன்றைய ஹார்விமில், மெஜிராமில்ஸ், மெஜிரா கோர்ட்ஸ், என பல பெயரிலும், தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும் அதன் உற்பத்தி பணிகளிலும் பல்வேறு மாற்றம் கண்டுவிட்டது. ஹார்விமில் பணிபுரியும் தொழிலாளிகள் 6 மணியளவில் வேலை முடித்து வருவார்கள். அவர்களுக்கு இரவு உணவாக மதுரை உணவு கடைகள் போடப்பட்டன. அது மாறாமல் இன்றும் தொடர்ந்துள்ளது. அதனால் மதுரைக்கு தூங்காநகரம் என பெயரிடப்பட்டன.

வெறும் 604 வீடுகளுடன் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்காக உருவாக்கப்பட்ட ஹார்விபட்டி இன்று பல ஆயிரம் வீடுகளும், பலதரப்பட்ட மக்கள் வாழும் பேரூராகவும் மாறிவிட்டது. கோயில் இல்லாத நகரமாக உருவாக்கப்பட்ட ஹார்விபட்டி இன்று பல்வேறு கோயில்களில் கொண்ட நகரமாக மாறிவிட்டது. காலங்களும், காட்சிகளும் மாறினாலும் ஒற்றுமையும் சமத்துவம், இன, மொழி, மத வேறுபாடின்றி வாழும் தன்மையும் இம்மண்ணிற்கும், இம்மண்ணில் வாழும் மக்களுக்கு உரித்தாகவே விளங்குகின்றன.

இன்றைய காலப்போக்கில் நாம் ஹார்விப்பட்டியைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஆனால் , இதற்கு முன்னால் மதுரையில் ஓர் முன்மாதிரியாக , எக்காலத்திலும் அழிக்கமுடியாத ஒன்றாக விளங்கியது. ஹார்விப்பட்டியில் தான் முதன்முதலில் ஆசிரியர்களுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் ஆசிரியராக , மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்த T.ஜேம்ஸ் கருணதாஸ் மற்றும் அவரின் துணைவியார் அன்னி கருணதாஸ் ஆகியோர் பணிபுரிந்தனர். அதற்கு அடுத்தபடியாக , 1965 ஆம் ஆண்டு ஆசிரியர் கருணதாஸ் தனது கல்விப் பணிக்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய விருதைப் பெற்றார். Guide to Radish Farming: முள்ளங்கி சாகுபடி.. மண்ணிற்கும் மனிதனுக்கும் சத்துகள் அளிக்கும் இயற்கை விவசாயி..!

பின்னர், இப்பள்ளியில் பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. பிற்காலத்தில் இப்பள்ளி , ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 32 ஆசிரியர்களைக்கொண்டு இயங்கியது. ஆனால் தற்போது , இப்பள்ளியில் 300 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். தொழிலாளர்கள் பெண் குழந்தைகளுக்கென தனிப்பள்ளி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின்படி 1947ம் ஆண்டு பிப்ரவரி 17ம் நாள் சென்னை மாகாண கவர்னரால் அடிக்கல் நிறுவப்பட்டது. அதை தொடர்ந்து 1948 பிப்ரவரி 27ம் பெண்களுக்கான தனிப்பள்ளி திறக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிக்காக ஹார்விப்பட்டிக்கு, இலவச ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டது. மதுரை ரயில் நிலையத்தில் நிற்காமல் இயக்கப்பட்ட முதல் ரயில் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்த ரயில் சேவைக்கு ஆகும் கட்டணத்தை ஹார்வி மில் ஆலய நிர்வாகம் ரயில்வேக்கு வழங்கியது. ரயில் சேவை ஹார்விபட்டி தொழிலாளர்களுக்கான பெருமை என இன்றும் பேசப்பட்டு வருகின்றன.