Delhi Air Pollution: மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்.. திணறும் மக்கள்.!

தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Air Pollution (Photo Credit: Wikipedia)

நவம்பர் 08, புதுடெல்லி (New Delhi): வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் தற்போது கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதேசமயம் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தொடங்கி ஜனவரி இறுதி வரை காற்று மாசு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சராசரியின்படி இன்று காலை 6 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 365 என்றளவில் இருந்தது. இந்த அளவு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருகிறது. Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!

காற்று தரக் குறியீட்டில் 0 முதல் 50 வரை இருந்தால் காற்று தரத்துடன் உள்ளது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருக்கும். இதே போல், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம் என்றும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசம் என்றும், 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசம் மற்றும் 401 முதல் 500 வரை இருந்தால் மிகவும் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.