Lok Sabha Elections 2024: கருத்துக் கணிப்பு வெளியிட்ட நந்திகோஷா டிவி.. கடும் நடவடிக்கை எடுத்த இந்திய தேர்தல் ஆணையம்.. ஒடிசாவில் பரபரப்பு..!

நந்திகோஷா டிவி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Election Commission of India & Voters (Photo Credit: Wikipedia)

மே 30, ஒடிசா (Odisha News): 2024 மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India), அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் செய்துள்ளது. உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலாக கவனிக்கப்படும் இந்தியா தேர்தல்கள் 2024 (2024 General Elections), ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் மாதம் 01ம் தேதி வரை ஏழு கட்டங்களாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்டங்கள் முடிந்துள்ளது. நாளை கடைசி கட்டத்தேர்தல் நடைபெற உள்ளது. இதன் வாக்கு எண்ணிக்கை அனைத்தும் ஒரேகட்டமாக ஜூன் 04 அன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். Vijay Sethupathi Attended The Wedding Ceremony: ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், துணைச் செயலாளரின் திருமண விழா.. நேரில் சென்று வாழ்த்திய விஜய் சேதுபதி..!

இந்த நிலையில் ஒடிசாவை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி நந்திகோஷா (Nandighosha TV), முன்கூட்டியே தேர்தல் கணிப்புகளை வெளியிட்டு உள்ளதை அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அந்த தொலைக்காட்சி மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 1ம் தேதி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைவதை அடுத்து 6:30 மணிக்கு மேல் தான் அனைத்து தொலைக்காட்சிகளும் தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.