Mumbai-Howrah Train Accident: மும்பை விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்..!
ஜார்க்கண்டில் இன்று அதிகாலை ஹவுரா-மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 30, ராஞ்சி (Jharkhand News): மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பை நோக்கி சென்ற ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (Train No.12810 Howara-CSMT Express) ரயிலின் 14 பெட்டிகள் இன்று அதிகாலை 3:45 மணியளவில் ஜார்க்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் அருகே பாரபம்பு என்ற கிராமத்தில் திடீரென தடம் புரண்டன. இதில் பயணிகள் நிலைகுலைந்து இடிபாடுகளில் சிக்கினர். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். Minor Girl Sexually Assaulted And Murdered: தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த சிறுவன்; உடந்தையாக இருந்த தாய் உட்பட 4 பேர் கைது..!
இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் ரயிலில் ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகிறனர். காயமடைந்தவர்களுக்கு ரயில்வே மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தனர், அவர்கள் இப்போது மேல் சிகிச்சைக்காக சக்ரதர்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தடம் புரண்டதற்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது, விபத்துக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் உள்ள பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.