Two Die in MP Train Accident: ரயில் படிக்கட்டில் பயணித்த 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு..!

மத்திய பிரதேசத்தில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த 2 பேர் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death | Railway Track (Photo Credit: Pixabay)

ஜூலை 27, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேச மாநிலம், சாகர்-பினா இடையேயான ரயில் பயணத்தின் போது, ரயில் பொதுப்பெட்டியில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். நேற்று காலை அந்த ரயிலில் கூட்ட நெரிசலுக்கு இடையில் ஒருவர் டீ (Tea) விற்பனை செய்து வந்துள்ளார். Young Girl Murder: பெண்கள் விடுதிக்குள் புகுந்து 24 வயது இளம்பெண் கழுத்தறுத்து படுகொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் பயங்கரம்..!

அப்போது, அங்கிருந்த பயணி ஒருவரின் மீது டீ தெரியாமல் ஊற்றியுள்ளது. இதில், டீ வியாபாரிக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் பெட்டிக்குள் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரயிலின் படிக்கட்டில் (Train staircase) பயணம் செய்த இரண்டு பேர் தவறி கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த ரயில்வே காவல்துறையினர் அவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement