Lakshadweep In Budget 2024: பட்ஜெட் தாக்கல் 2024.. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை.. மாலத்தீவுக்கு சாட்டையடி..!
லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அச்சமயம் பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின.
மாலத்தீவு பிரச்சனை: அப்போது பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவின் ஆளுங்கட்சி மூத்த தலைவர் ஜாகித் ரமீஸ், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சுற்றுலா துறையில் எங்களுடன் இந்தியா போட்டி போடுவது ஒரு மாயை. நாங்கள் வழங்கும் சேவையைப் போன்று இந்தியாவால் வழங்க முடியுமா? இந்தியர்களால் சுத்தத்தை பேண முடியுமா? இந்திய சுற்றுலா நகர அறைகளின் தூர்நாற்றம் ஒன்றே, சுற்றுலா துறையை படுபாதாளத்துக்கு தள்ளிவிடும்" என்று குற்றம்சாட்டியிருந்தார். Budget 2024: பட்ஜெட் தாக்கல்... நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பூட்டிய ஜனாதிபதி திரவுபதி முர்மு..!
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய போராக வெடித்தது. இதனால், மாலத்தீவுக்கு செல்வதை புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள தீவுகளுக்கு செல்வதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட தொடங்கினர். அதோடு நின்றுவிடாமல், Boycott Maldives எனும் ஹேஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட்டாகியது.
அதுமட்டுமின்றி மாலத்தீவை புறக்கணித்துவிட்டு இந்திய சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள் என்று சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபல நடிகர்கள் உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து, மாலத்தீவு அதிபரின் இணையத்தளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கின. UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!
லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை: ஆனால் இதனைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இந்திய அரசின் சார்பில் வெளியிட படாமல் இருந்தது. இந்நிலையில் 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) இன்று இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில், உள்நாட்டு சுற்றுலாவினை ஊக்குவிக்க துறைமுக இணைப்பு, சுற்றுலா உட்கட்டமைப்பு, பிற வசதி திட்டங்கள் இலட்சத்தீவு (Lakshadweep) உட்பட பிற இந்திய தீவுகளில் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் மாலத்தீவு விவகாரத்திற்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய சுற்றுலாத்தலத்தை மேம்படுத்துகிறது.