பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டம் நேற்று கூடியது. இந்தக் கூட்டத் தொடர் பிப்ரவரி 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman) இன்று இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மொரார்ஜி தேசாய்-க்கு பின்னர் 6-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவார். UP Mass Marriage Fraud: கல்யாணம் பண்ணிக்கிட்டா 51,000 ருபாய்.. ஒரே நாளில் 500 திருமணங்கள்.. காசுக்காக மாப்பிளை இல்லாமல் தாலி கட்டிக்கொண்ட பெண்கள்..!
மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர்கள் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நிர்மலா சீதாராமனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு (President Droupadi Murmu) இனிப்பூட்டினார். இந்த புகைப்படமானது இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.