Amit Shah Wins In Gandhinagar: மக்களவைத் தேர்தல் முடிவுகள்.. காந்திநகரில் அமித் ஷா வெற்றி..!
குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் அமித் ஷா அபார வெற்றியை பெற்றுள்ளார்.
ஜூன் 04, காந்திநகர் (Gandhinagar News): அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மக்களின் முடிவை எதிர்நோக்கி தங்களின் வாக்குகளை அறிந்து வெற்றி/தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறின. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவித்தன. How Accurate Are Exit Polls: 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. செல்லாக்காசாய் போனது ஏன்?.!
ஆனால் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 231 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவது தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் குஜராத் மக்களவை தொகுதியான காந்தி நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமித் ஷா 10,10,972 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து அந்த தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பளரான சோனல் ராமன்பாய் பட்டேலை விட 7,44,716 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.