NITI Aayog- Decline In Poverty: கடந்த 10 ஆண்டுகளில் 24 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு.. மத்திய அரசின் சரித்திர சாதனை.. நிதி ஆயோக் அறிவிப்பு.!
இதனை நிதி ஆயோக் உறுதி செய்துள்ளது.
ஜனவரி 15, புதுடெல்லி (New Delhi): மாநில வாரியாக, மாநிலங்களுடன் ஒன்றிணைந்து தேசிய அளவிலான வளர்ச்சி, துறைகளுக்கான முன்னுரிமை மற்றும் அதன் வளர்ச்சிக்கான யுக்திகள், பொருளாதார நலன்கள் ஆகியவற்றை ஒருசேர கட்டமைத்து இந்தியாவை வலுப்படுத்த கடந்த 2015ம் பொதுக் கொள்கை சிந்தனைக் குழு நிதி ஆயோக் (NITI Aayog) உருவாக்கப்பட்டது.
நிதி ஆயோக் அறிக்கை: அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல் முந்தைய கால தரவுகளின் அடிப்படையில், எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு யுக்திகளை மேற்கொள்ள நிதிஆயோக் மத்திய அரசுக்கு வழிகாட்டி வருகிறது. இந்நிலையில், தற்போது நிதி ஆயோக் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 9 ஆண்டுகளில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. School Girl Raped: இன்ஸ்டா காதலனை நம்பிச் சென்ற சிறுமி 3 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்: 23 வயது இளைஞன், இரண்டாவது முறை போக்ஸோவில் கைது.! அதிர்ச்சி பின்னணி..!
10 ஆண்டுகளுக்கு முன் 30% வறுமை: வல்லரசை நோக்கிய பயணத்தை எடுத்துவைத்துள்ள இந்தியாவில், வறுமை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. கடந்த 2013 - 2014ம் ஆண்டில் வறுமை விகிதம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிலும் 29.17% என இருந்தது. இந்த விழுக்காடை விரைந்து குறைக்க, 2015ம் ஆண்டு முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2024ல் 20% பேர் முன்னேற்றம்: மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலன்காக்கும் மற்றும் அவரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் திட்டங்களினால் வறுமை விழுக்காடு என்பது 29.17%-ல் இருந்து 2023 - 2023ம் ஆண்டில் 11.28%-ஆக குறைந்துஉள்ளது. இதன் வாயிலாக கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 24.82 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து தப்பி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல் நிதிஆயோக் சேகரித்த தகவலை கொண்டு, தற்போதைய அளவுகளும் மதிப்பிடப்பட்டுள்ளன.