Accuse Vasantharaj | Instagram Love & Harassment (Photo Credit: @Sriramrpckanna1 X / PIxabay)

ஜனவரி 15, நாகர்கோவில் (NagarKovil News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், மேலக்கலுங்கடி பகுதியில் வசித்து வருபவர் வசந்தராஜ் (வயது 23). இவர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நாகர்கோவில் பகுதியில் செயல்படும் பள்ளியில், 17 வயதுடைய சிறுமி பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். மாணவி இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வந்ததாக தெரியவருகிறது.

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுமிக்கும் - வசந்தராஜுக்கும் இடையே இன்ஸ்டாகிராம் செயலி வாயிலாக நட்பு ஏற்பட, பின்னாளில் சிறுமியை வசந்தராஜ் தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார். மேலும், மாணவியிடம் நெருக்கமான நபர் போல நடித்து வந்த வசந்தராஜ், தனது நண்பரின் வீட்டிற்கு மாணவியை அழைத்துசென்றுள்ளார்.

வீட்டிற்குள் அடைத்துவைத்து பலாத்காரம்: அங்கு சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறிய வசந்தராஜ் அத்துமீற முயலவே, பதறிப்போன சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது வலையில் விழுந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். 3 நாட்கள் வீட்டிற்குள்ளேயே சிறை வைத்து கொடுமை நடந்துள்ளது. நாட்கள் கடந்ததும் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். Husnabad Accident: சாலையில் உருண்டோடிய கார்.. நான்கு பேர் காயம்... நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!

Women Abuse | Feeling Sad File Pic (Photo Credit: Pixabay)

கண்ணீர் மல்க தாயிடம் விவரித்த மகள்: வீட்டிற்கு சென்ற சிறுமி தனது தாயிடம் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கவே, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வசந்தராஜை கைது செய்தனர். அவரின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.

19 வயதில் முதல் போக்ஸோ: வசந்தராஜின் மீது கடந்த 2020ம் ஆண்டு சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த விவகாரத்தில் ஏற்கனவே அவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் மீது வடசேரி காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

வசந்தராஜால் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்க வேண்டுகோள்: சிறுமியை போல வேறு யாரேனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்ற விசாரணையையும் அதிகாரிகள் முன்னெடுத்து இருக்கின்றனர். பெண்கள் யாரும் பாதிக்கப்பட்டு இருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் பெண்களின் விபரங்கள் பாதுகாக்கப்படும்.