President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!

இந்திய நாடாளுமன்றத்தில் 2023 பட்ஜெட் தாக்கல், கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். முழு விபரத்திற்கு செய்தியை தொடர்ந்து படிக்கவும்.

President Speech On Parliament: பாராளுமன்றத்தில் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்த குடியரசுத்தலைவர்.. முழு விபரம் உள்ளே.!
President Droupadi Murmu (Photo Credit: ANI)

ஜனவரி 31, நாடாளுமன்றம்: 2023ம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற (Parliament Session 2023) கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu, President Of India) உரையுடன் இன்று தொடங்கியது. இந்த ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற தொடர் என்பதால், மக்களவை மற்றும் மாநிலங்களவை (Rajya Sabha, Lok Sabha) உறுப்பினர் முன்னிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையாற்றினார். அவரின் நீண்ட உரை பின்வருமாறு., (President Droupadi Murmu Addressing Parliament Budget Session 2023)

"கடந்த 9 ஆண்டுகளில் இந்திய நாட்டின் (India) மீதான உலக நாடுகளின் (World Countries) பார்வை என்பது மாறியுள்ளது. இந்தியா பிற நாடுகளை சார்ந்து இருக்கிறது என்ற நிலை மாறியுள்ளது. நவீனமயமான கட்டமைப்புகளை நோக்கி இந்தியா நகர்ந்து வருகிறது. உலக அரங்கில் சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய டிஜிட்டல் வளர்ச்சி (Digital India) உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இந்திய மக்களின் சீரான வளர்ச்சியே அரசின் இலக்கு ஆகும். Women Escape With Minor Boy: 33 வயது இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த 17 வயது சிறுவன்.. படிப்பை கைவிட்டு வேலைக்கு சென்ற இடத்தில் விபரீத காதல்.! 

உலகளவில் உள்ள நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் இடத்தில் இன்று இந்தியா உள்ளது. 2047ம் ஆண்டுக்குள் இந்தியா புதிய இந்தியாவினை உருவாக்க வேண்டும். இந்தியாவின் வறுமையை ஒழிக்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை கட்டமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்திய வளர்ச்சியில் இளைஞர்கள், பெண்கள் (Women & Youngsters Empowerment) முக்கிய பங்கேற்ற வேண்டும். நாம் புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கு அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமான ஆண்டுகளாகும்.

Parliament Session 2023-2024 (Photo Credit: ANI)

தீவிரவாதத்தை (Terrorism) ஒடுக்கும் விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது. ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir) விவகாரத்தில் மத்திய அரசு திறம்பட செயல்பட்டுள்ளது. ஆளும் அரசு எதற்கும் அஞ்சாமல் முடிவெடுக்கும் அரசாக உள்ளது. முத்தலாக் (Muthalak) விவகாரத்திலும் மத்திய அரசு (Central Govt) சிறப்புடன் பணியாற்றியுள்ளது. அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவுகிறது. 50 கோடி ஏழை மக்கள் மத்திய அரசுடைய காப்பீடு திட்டங்களை பெற்றுள்ளார்கள். இந்தியாவில் 11 கோடி வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3 கோடி ஏழைகளுக்கு இலவச வீடுகள் மத்திய அரசால் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் (Corona) ஏழைகளை மத்திய அரசு கேடயம் போல இருந்து பாதுகாத்தது. கொரோனாவில் (Covid19) இந்திய அரசின் நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டின. நமது ஜனநாயகத்திற்கு ஊழல் மிகப்பெரிய எதிரியாக இருக்கிறது. ஊழல் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. விரைவில் இந்தியா ஊழல் இல்லாத நாடக மாறும். ஜி.எஸ்.டி வரி & ஆயுஷ்மான் திட்டங்கள் (GST Tax & Ayushman Schemes) இந்தியாவின் முதுகெலும்பாய் இருக்கின்றன. Thaadi Balaji Wife Nithya Issue: துணிவு படம்பார்த்துவிட்டு வந்த நித்யாவுக்கு நடந்த சம்பவம்.. இலஞ்சத்தால் தடம்புரளுகிறதா காவல்துறை?.. பரபரப்பு பேச்சு.! 

கொரோனா காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுகள் வழங்கப்பட்டன. பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு நிவர்த்தி செய்கிறது. சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.2.25 இலட்சம் கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது. விளை பொருட்களுக்கு கூறிவந்த ஆதார விலையை உறுதி செய்துள்ளது. ஏழைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டு, அதற்கு நிரந்தர தீர்வும் செய்துகொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு வெளிப்படை தன்மையோடு ரூ.27 இலட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கொரோனா கால உதவியால், அக்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்கிக்கொள்ளாமல் மீட்கப்பட்டனர். கொரோனா காலத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை உலக வங்கி (World Bank) பாராட்டியது. உலக நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியா சிறப்பாக இருக்கிறது. இந்திய மக்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லாது மத்திய அரசு செயல்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாத பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அங்கு சுற்றுலாக்கள் (Jammu Kashmir Tourisim) மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது.

Parliament Session 2023-24 (Photo Credit: ANI)

பெண்களுக்கு அதிகாரமளித்து (Women Empowerment), அவர்களின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்கிஉள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 11 கோடி இந்திய மக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காலனிகால அடிமைத்தன அடையாளத்தை மத்திய அரசு அகற்றிவிட்டது. எல்லையில் இருக்கும் கிராமங்களை மேம்படுத்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக்கல்லூரிகளை (Medical College) அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. Tenkasi Married Girl Kidnap Issue: தென்காசி காதல் திருமண ஜோடி பெண் வீட்டாரால் கடத்தப்பட்ட விவகாரம்.. எஸ்.பி-க்கு டோஸ் விட்ட டி.ஜி.பி.!

இராணுவ தளவாடங்கள் (Army Equipments) தயாரிப்பில் இந்தியா புதிய அபரீத வளர்ச்சியை கண்டுள்ளது. உள்நாட்டில் போர் விமானம் (WarPlane) தயாரிக்கும் அளவு இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவில் 90 ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் (StartUp Companies) புதிதாக பணிகளை தொடங்கியுள்ளன. இந்திய இளைஞர்கள் நாட்டிற்காக பணியாற்ற அக்னீவீர் திட்டம் (Agnipath Yojana) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலக அரங்கில் செமி கண்டெக்டர்கள் (Semi Conductors Manufacturing) உற்பத்தியில் இந்தியா புதிய மையமாக செயல்படுகிறது. பிராட்பேண்ட் சேவையில் (Broadband Connection) இந்தியா புதிய புரட்சியை செய்திருக்கிறது. விளையாட்டுத்துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருகிறது.

வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ள நிதி மோசடியாளர்களை இந்தியாவிற்கு திரும்பி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் பாதுகாப்பு தளவாடத்தின் எண்ணிக்கை 8 மடங்கு அதிகரித்து இருக்கிறது. விமான போக்குவரத்து துறையில் (Air Traffic Control) உலகளவில் இந்திய 3ம் இடத்தில் இருக்கிறது. விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்தது இந்தியாவிற்கே பெருமை ஆகும். ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் (Olympic & Para Olympic) போட்டிகளில் இந்திய வீரர்கள் பல பதக்கங்களை வென்றுள்ளனர். பசுமை எரிசக்தியை (Green Energy) இந்தியா 4ம் இடத்தில் முன்னேறி இருக்கிறது.

2070 க்குள் மாசு இல்லாத இந்தியாவை உருவாக்குதலே மத்திய அரசின் இலக்கு ஆகும். இந்திய இரயில்வேயை (Indian Railway) மத்திய அரசு நவீனமயமாக்க பல நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. தொலைதூர வடகிழக்கு மாநிலங்கள் (North Eastern States), ஜம்மு காஷ்மீர் இரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சூரியசக்தி (Solar Energy) பயன்பாடு 6 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறினார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 31, 2023 01:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement