PM Modi Wish on Thaipoosam: "முருகனின் அருள் எப்போதும் நம்மீது இருக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடியின் தைப்பூச வாழ்த்து.!
பிரதமரின் வாழ்த்தை அறிய தொடர்ந்து படிக்கவும்.
ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): உலகெங்கும் உள்ள தமிழர்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும் தைப்பூச திருவிழா (Thaipoosam Celebration) இன்று கொண்டாடப்படுகிறது. இன்று உலகெங்கும் உள்ள முருகன் கோவில்களில் விழாக்கள் களைகட்டியன. முருக பக்தர்கள் பலரும் காவடி, விரதம் இருந்து கோவிலுக்கு செல்வது என தைப்பூச நாளில் முருகனை பயபக்தியுடன் வழிபட்டு மகிழ்ந்தனர்.
தைப்பூச திருவிழா கொண்டாட்டங்கள்: தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடு உட்பட பல கோவில்களில் மக்கள் வெள்ளம் அதிகரித்தது. கடலூரில் உள்ள வடலூர் வள்ளலார் கோவிலில், காலை 6 மணியளவில் அருட்பெருஞ்ஜோதியாக வள்ளலார் காட்சி தந்தார். அசுரன் தருகாசுரனை வதம் செய்த பழனியில், இன்று தேரோட்டமும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. HC On Husband's Impotency and Wife: கணவருக்கு ஆண்மைக்குறைவு இருந்தால் மனைவி தனியாக இருக்கலாம், ஜீவனாம்சம் கோரலாம் - நீதிமன்றம் தீர்ப்பு.!
உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை: தென்னிந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, இன்று வரை எவ்வித குறைபாடும் இன்றி தைப்பூச திருவிழா தமிழர்களால் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. மலேஷியா, இலங்கை, சிங்கப்பூர், இந்தோனேஷியா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் பிரதானமாக வாழும் தமிழர்களும் இன்று முருகனை வழிபட்டு ஆசி பெற்றனர்.
பிரதமரின் வாழ்த்து: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்த ட்விட் பதிவில், "தைப்பூசத்தின் சிறப்பு நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நம் மீது இருக்கட்டும். இந்த சிறப்பு நாள் அனைவருக்கும் வலிமையையும், செழிப்பையும் தரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்தார்.