PM Modi Fasting for Ram Mandir Inauguration: அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம்: 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கும் பிரதமர் மோடி..!
உலகெங்கும் வாழும் இந்துக்களின் நெடுங்கால ஆசை ஜனவரி 22ம் தேதி அன்று நிறைவேறவுள்ளதை முன்னிட்டு, பலரும் அயோத்தி விரைந்துள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக இந்தியாவே தயாராகி இருக்கிறது.
ஜனவரி 12, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் (Ayodhya Ram Temple), ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது. ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவி, கோவில் மக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது. இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரில் காண இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள ராம பக்தர்களும் அயோத்தி வரவுள்ளார்.
புத்துயிர்பெற்ற அயோத்தி மாநகரம்: இதனைமுன்னிட்டு அயோத்திக்கு கூடுதல் இரயில் மற்றும் விமான சேவைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி (Ayodhya Dham) விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் நேரடியாக அங்கு சர்வதேச விமான சேவையும் வழங்கப்பட்டுள்ளது. கோவில் திறப்பு விழாவுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி விரதம் (PM Modi Fasting) இருக்கிறார்: இந்நிலையில், ராமர் கோவில் கும்பாவிஷேகத்திற்காக பல பக்தர்களும் தங்களுக்கு விருப்ப விரத முறைகளையும் கடைபிடிக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 11 நாட்களுக்கு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். ராமர் கோவில் விழாவில் முக்கிய விருந்தினராக கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு கிடைத்த வாய்ப்புக்கு மரியாதை செய்யும்பொருட்டு, தானும் விரதம் இருப்பதாக தெரிவித்துள்ளார். Amazon Audible Layoff: தொடரும் பணிநீக்க நடவடிக்கை; களத்தில் இறங்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!
11 நாட்கள் விரதம்: இதுகுறித்து அவர் கூறுகையில், "அயோத்தி ராமர் கோவில் கும்பாவிஷேகம், சிலை நிறுவுதல் பணிகளுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கின்றன. இந்த நிகழ்வை நானும் காண முடிந்தது எனது அதிஷ்டமே ஆகும். அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் என்னை இறைவன் இயக்கி இருக்கிறார். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம், சிறப்பு சடங்குகள் ஆகியவற்றை கடைபிடிக்கவுள்ளேன். உங்களின் ஆசிர்வாதத்தை நான் பெறுகிறேன்.
தலைமுறைகளின் கனவு நனவாகிறது: எனது வாழ்க்கையில் முதல் முறையாக பரிபூரண உணர்வை நான் அனுபவிக்கிறேன். இந்த உணர்ச்சிப்பயணம் வெளிப்பாடு அல்ல, மனத்தால் உணரப்பட்ட விஷயம். எனது வார்த்தைகளால் மட்டுமே அதனை இயன்றளவு நான் வெளிப்படுத்துகிறேன். பல தலைமுறைகளின் கனவு நினைவாகிறது. தெய்வங்களுக்கு சடங்குகள் செய்யும் முன்பு விரதங்கள் இருக்கும் முறை சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சாஸ்திரங்கள் கூறும் தகவல்: நானும் எனது 11 நாட்கள் விரத சடங்கை தொடங்குகிறேன். பஞ்சவடி ஸ்ரீ ராமர் அதிக நேரம் செலவழித்த புனித பூமி ஆகும். அங்கிருந்து எனது விரதத்தை தொடங்குகிறேன். நமது சாஸ்திரப்படி யாகம், கடவுள் வழிபாடு தெய்வீக உணர்வை எழுப்பும். கும்பாவிஷேகத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விரத முறைகளும் இருக்கின்றன. முனிவர்கள், துறவிகள், நற்பண்புகள் கொண்டோரின் சார்பாகவும் நான் பிரார்த்திக்கிறேன். அவர்களின் வார்த்தை, மனம், செயல் எப்போதும் குறைவது இல்லை" என தெரிவித்துள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)