PM Meet with Athletes: பதக்கங்களை குவித்த தடகள வீரர்கள், பயிற்சியாளர்களை அக்.10-ல் நேரில் சந்திக்கிறார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் விளையாடிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நேரில் சந்திக்கிறார்.

Narendra Modi (Photo Credit: Twitter)

அக்டோபர் 09, புதுடெல்லி (New Delhi): சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல், இந்தியா 60 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய பதக்கங்களை வெற்றிவாகையாக சூடி இருக்கிறது‌.

இந்திய விளையாட்டு வீரர்கள் 28 தங்கப்பதக்கம் உட்பட 107 பதக்கங்களை வென்று உலகையே திரும்பி பார்க்க வைத்தனர். கடந்த 2018ல் 70 பதக்கங்களை வென்ற இந்தியா, தற்போது நமது தாய்நாடு பெருமை கொள்ளும் வகையில் 100-ஐ கடந்து பதக்கங்களை குவித்துள்ளது.

இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது பாராட்டுகளை தெரிவித்த நிலையில், அனைவரையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இந்நிலையில், அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் ஆகியோரை தனிப்பட்ட முறையில் நேரில் சந்திக்க உள்ளார்.

இவர்களுடன் நடைபெறும் ஆலோசனைகள் எதிர்கால விளையாட்டுக்கு தொடர்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.