Ram Mandir Pranpratishtha Full Details From 15 Jan: ராமர் கோயில் திறப்பு விழா... பூஜைகள் பற்றிய முழு விவரம்..!

ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு நடைபெறவுள்ள பூஜைகள் பற்றி ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

Acharya Satyendra Das (Photo Credit @ANI X)

ஜனவரி 12, உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh): வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பிரதிஷ்டை விழா (Ram Mandir Pranpratishtha) நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். பா.ஜ.க.வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூஜைகள் பற்றிய முழு விவரம்: இந்நிலையில் ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் (Chief Priest of Ram Janmabhoomi Teerth Kshetra Acharya Satyendra Das), ராமர் கோயிலின் பிரதிஷ்டை விழா மற்றும் அதற்கு முந்தைய சடங்குகள் பற்றிய விவரங்களைப் பற்றி தற்போது தகவல் தெரிவித்துள்ளார். US and UK Strike Back at Several Houthi Sites: செங்கடலில் போர் மேகம்... ஹவுதி மீது அமெரிக்கா கடும் தாக்குதல்..!

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, "அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், கோவிலில் முதல் தங்க கதவு நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவிலில் மொத்தம் 13 தங்க கதவுகள் அமைக்கப்படவுள்ளது. இதர கதவுகளை இன்னும் 3 நாட்களில் பிரதிஷ்டை செய்யவுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி கர்மாக்கள் முடிவடையும். போது ஜனவரி 15 மற்றும் 16 முதல் பூஜை தொடங்கும். பின்னர் சிலையானது எடுத்து செல்லப்படும். அதன் பிறகு, மற்ற சடங்குகளும் பின்பற்றப்படும். பிரதிஷ்டை விழாவிற்கு முன் இந்த செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்படும். பிரதான விழாவில் முக்கிய நிகழ்வு மட்டுமே நடக்கும். ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது." என்று கூறியுள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement