US and UK Strike (Photo Credit: @haynesdeborah X)

ஜனவரி 11, ஹவுதி (Houthi): காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏமனின் ஹவுதி இயக்கம், இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல்களை குறிவைத்து முதலில் தாக்குதல் நடத்தி வந்தது. பின்னர் செங்கடல் வழியாக செல்லும் பிரிட்டன், இந்தியா கப்பல்களையும் குறிவைத்து ஹவுதி இயக்கம் தாக்குதல் நடத்தியது.

இதன் காரணமாக ஐரோப்பியா மற்றும் இந்தோ-பசுபிக் பகுதிகளை இணைக்கும் செங்கடல் அச்சுறுத்தல் மண்டலாமக மாறியது. மேலும் சில சரக்கு கப்பல்கள் ஆப்பிரிக்கா கடல் வழியாக பயணத்தை மாற்றின. இதன் காரணமாக உலகளவிய பொருளாதார சிக்கல் எழும் அபாயம் ஏற்ப்பட்டது. மேலும் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கி வந்தது. Thoothukudi Shocker: ஓரினசேர்கைக்கு மறுத்த 8 வயது சிறுவன் கொலை: போதைக்கு அடிமையான 19 வயது இளைஞர் அதிர்ச்சி செயல்.!

தொடர்ந்து ஏமன் நாட்டில் இயங்கும் ஹவுதி இயக்கத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த நிலையில், செங்கடலைப் பாதுகாக்க, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டது. மேலும் ஹவுதி இயக்கத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

ஹவுதிகள் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: இதனை பொருட்படுத்தாத ஹவுதி இயக்கம் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட 10 நாடுகளின் கூட்டுப்படைகள் ஒண்றினைந்து ஏமனின் முக்கிய நகரங்கள் மீதும், கடும் வான்வழித்தாகுதலை தொடங்கியது.

நவம்பர் நடுப்பகுதியில் இருந்து ஏமனின் ஹவுதிகள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது மொத்தம் 27 தாக்குதல்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜதந்திர முயற்சிகள் தோல்வ்பியடைந்த பின் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்ப்பட்டுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.