BJP H Raja about EVKS Elangovan: "துடைப்பத்தால் அடிவாங்கியவருக்கு யார் ஒட்டு போடுவார்கள்?" - ஈரோடு இடைத்தேர்தலில் இவருக்குத்தான் வெற்றி: எச்.ராஜா பேச்சு.!

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் புகைப்படத்தை துடைப்பத்தால் அடித்து துவைத்த மக்கள், அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பாஜக மூத்த தலைவர் பேசினார்.

BJP H.Raja (Picture Credit: Facebook)

ஜனவரி 28: தூத்துக்குடியில் (Thoothukudi) வைத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா (H.Raja) பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் (EVKS Elangovan) புகைப்படத்தை தமிழக மக்கள் விளக்குமாரால் அடித்தார்கள். அதனை மறக்க முடியாது. அதனால் அவரே குழியை வெட்டிக்கொண்டார். எதிர்கட்சிக்காரர் வெற்றிபெறுவார்.

கமல் ஹாசன் (Kamal Hassan) காங்கிரஸுக்கு (Congress) ஆதரவு தெரிவித்ததால் ஒரு பயனும் இல்லை. சுழியமும் சுழியமும் இணைந்தால் சுழியமே வரும். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர் என்பதால் கட்டாயம் எதிர்க்கட்சி தான் வெற்றி அடையும். கமல் ஹாசனின் காங்கிரஸ் ஆதரவு குழப்பத்தையே தரும்.

மக்களின் அவரின் அறிக்கையை படித்து புரிந்துகொள்ள இயலாமல் எதிர்கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள். வாழ்க்கையில் ஒழுக்கமாக, நேர்மையாக வாழ்ந்தவரா கமல் ஹாசன்?. அவர் பற்றி கவலைகொள்ள தேவையில்லை. பாஜக (BJP) சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் 30ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னர் முடிவுகள் வெளியிடப்படும். Wedding Poster Like Dil Raju Dialogue: இது அதுல… தில் ராஜுவின் டயலாக்கை வைத்து நண்பனுக்கு திருமண போஸ்டர்.. மொத்தத்துல ஆப்பு டோய்..! 

Kamal Hassan on Press meet (Photo Credit: ANI)

தேர்தல் அறிக்கையில் (DMK Manifesto 2021) மாதாமாதம் மின்சாரம் கட்டணம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக அறிவித்து இருந்தது. ஆனால், ஆட்சிப்பொறுப்பேற்று இரண்டாண்டுகள் ஆகப்போகும் நிலையில், நேற்று அமைச்சர் என்ன கூறுகிறார்?. செயல்படுத்த முடியாது என கூறுகிறார்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செயல்படுத்த முடியாது என அந்தந்த துறை அமைச்சர்களே தெரிவித்துவிட்டார்கள். மக்கள் இனி திமுக பக்கம் தலைவைத்துகூட படுக்கமாட்டார்கள். எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கவேண்டியது மட்டும் தான். மத்திய அரசு (Central Govt) நிர்பந்திக்கிறது என்றால், அதற்கான கடிதத்தை வெளியே காட்டுங்கள்" என்று தெரிவித்தார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 28, 2023 10:59 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now